இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் ஓய்வு பெற்ற தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜபாளையத்தில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து பின் ஓய்வு பெற்றார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாராயணசாமிக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதனால் கடினமான வேலைகளை செய்யக் கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அந்த ஊரில் உள்ள தோட்டத்தில் நாராயணசாமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நாராயணசாமியின் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறப்பு வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.