மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குருகப்பட்டியில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவன ஊழியராக ஓசூரில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இளங்கோவன் புலியூர்-ஊத்தங்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தது.அதே வழியாக கேரிகேப்பள்ளியில் வசிக்கும் விவசாயியான செல்வம் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக இருவரது வாகனங்களும் மோதி கொண்டது. இதனால் சம்பவ இடத்திலேயே இளங்கோவன் செல்வம் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விரைந்து வந்தவர்கள் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.