Categories
தேசிய செய்திகள்

“21 பேர்”… உயிரிழந்தவரை அடக்கம் செய்ய சென்றபோது… அரங்கேறிய கொடுமை..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இறுதி சடங்கிற்காக மயானத்திற்கு சென்றிருந்தபோது மேற்கூரை இடிந்து விழுந்ததால் மேலும் 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டம் முராத்நகர் பகுதியை சேர்ந்த ஜெயராம் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை தகனம் செய்ய அவரது உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் மயானத்துக்கு சென்றனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். உடலை தகனம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென பெய்த கனமழை காரணமாக மயான கட்டடத்தில் ஒதுங்கியுள்ளனர்.

அங்கிருந்த மயான கட்டடம் மிகவும் பாழடைந்து, பராமரிப்பு இல்லாமல் இருந்ததால் கனமழையின் காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் சுமார் 21 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 20 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும், அவரது உறவினர்கள் மீட்டு வீடுகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள உத்திரபிரதேச மாநில தலைவர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 2 லட்சம் இழப்பீடு வழங்க அறிவித்துள்ளார்.

Categories

Tech |