இறந்தவரை அடக்கம் செய்ய சென்றபோது 21 பேர் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் ஜெய்ராம் என்பவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, இவரை தகனம் செய்யம் அவருடைய உறவினர்கள் இடுகாட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது சுமார் 50க்கும் மேற்பட்டோர் இடுகாட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென கனமழை பெய்துள்ளது. இதனால், அங்கிருந்தவர்கள் மயான கட்டடத்தில் நின்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது கனமழை காரணமாக மயானத்தின் மேற்கூறை இடிந்துள்ளது. இதில் சிக்கி சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 20 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த சம்பவத்துக்கு ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.