விழுப்புரம் அருகே மையானத்திற்கு பாதை இல்லாததால் விளைநிலங்கள் வழியாகவே சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை தொடர்வதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோழியுனுர் அருகே உள்ள காவணி பாக்கம் கிராமத்தில் மையானத்திற்க்கு செல்ல பாதை இல்லாததால் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளனர். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சடலங்களை விளைநிலங்கள் வழியாக சுமந்து செல்ல வேண்டிய நிலை பல ஆண்டுகளாக தொடர்வதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே மையானத்திற்கு பாதை அமைத்துக்கொடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.