Categories
தேசிய செய்திகள்

“நீங்க வர வேண்டாம்… இனி நாங்களே வருவோம்”… தபால் துறையின் அதிரடி அறிவிப்பு..!!

தபால் துறையில் தற்போது எல்லாம் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. இனி நேரடியாக வங்கிக்கு வர தேவை இல்லை என்று அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தபால் துறை வளர்ச்சி சற்று பாதித்திருக்கின்றது காரணம் மற்ற வங்கிகள் அதிக அளவில் இருப்பதால் தான். கடந்த சில மாதங்களாக தபால் துறையின் வளர்ச்சி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. தபால் அலுவலக சேமிப்பு வங்கி ஏப்ரல் மாதத்தில் மற்ற வங்கி கணக்குடன் இணைக்கப்படும். மேலும் அனைத்து சேவைகளும் டிஜிட்டல் மயமாக்க படும். அனைத்து சேவைகளுக்கும் மக்கள் பயனுள்ள வகையில் அமையும் என்று தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக ரயில் சாலை மற்றும் விமானப் போக்குவரத்து மூடப்பட்டிருந்த போது அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் அஞ்சல்துறை சிறப்பாக செயல்பட்டதாக பிரதீப் குமார் கூறினார். புதிய ஆண்டில் தபால் அலுவலக சேவைகளை அதிகரிப்பது மற்றும் வீடுகளுக்கு சென்று சேவைகளை வழங்குவது குறித்து தீவிரமாக செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். எங்கள் வங்கி மற்றும் நிதி சேவைகள் ஏற்கனவே டிஜிட்டல் முறையில் உள்ளன. தபால் அலுவலக சேமிப்பு வங்கிகள் ஏப்ரல் மாதத்திற்குள் மற்ற வங்கிகளுடன் நேரடியாக இணைக்கப்பட உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்தியா போஸ்ட், நாடு முழுவதும் 5.56 லட்சம் தபால் நிலையங்கள் மூலம் 50 கோடிக்கும் அதிகமான தபால் அலுவலக சேமிப்பு சேவை செயல்பட்டு வருகின்றது. இந்த சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதை தவிர வீட்டிலேயே சென்று மக்களுக்கு சேவைகளை வழங்குவதிலும் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு 85 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் 9 கோடி அனுப்பியுள்ளதாகவும், 3 லட்சம் ஓய்வூதியதாரர்கள் சரிபார்ப்பு அவர்கள் வீட்டில் செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். அஞ்சல் துறை சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச நிலுவைத் தொகை ரூபாய் 50 லிருந்து 100 ஆக உயர்த்தி உள்ளதையும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |