வரப்போகும் தேர்தலை பற்றிய கருத்து கணிப்பில் போரிஸ் ஜோன்சன் தோல்வி அடைவார் என்று தெரியவந்துள்ளது
பிரிட்டனில் 2024-ம் வருடத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனிடையே ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிவிட்டது. மேலும் கொரனோ வைரஸ் தீவிரம் ஆகியவைகளை கொண்டு மக்களிடையே தேர்தல் குறித்து முதல் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாது என்று தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், பிரக்சிட் தொடர்பில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஆல் கையாளப்பட்ட விதம் மக்களுக்கு அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவற்றை கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி அடைந்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர். மேலும் தற்போது உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பரவி வருவது மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையில் உறவினர்களையும் நண்பர்களையும் சந்திப்பதற்கு அனுமதி வழங்கிய பின்னர் அதனை உடனே திரும்ப பெறப்பட்டது மக்களுக்கு ஜோன்சன் இன் மீதுள்ள செல்வாக்கு குறைய வழிவகுத்துள்ளது. மேலும் வரும் 2024 ஆம் வருடத்திற்கான தேர்தலில் போரிஸ் ஜோன்சன் கட்சியான கன்சர்வேடிவ் 284 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
மேலும் எதிர்க்கட்சியான லேபர் கட்சி 282 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது. இதன் மூலம் கன்சர்வேடிவ் கட்சி 81 தொகுதிகளை இழக்க வாய்ப்புள்ளது. மேலும் ஸ்காட்டிஷ் தேசிய கட்சியானது பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்தை பிரிக்கவேண்டும் என்று போராடி வருகிறது. மேலும் இந்த கட்சி ஸ்காட்லாந்தில் இருக்கும் 59 தொகுதிகளில் 57 ல் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே அடுத்த கட்சியை தீர்மானிக்கக் கூடிய சக்தியை இக்கட்சி பெறும். மேலும் வரும் காலங்களில் கொரோனோவை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பொறுத்துதான் ஜோன்சன் கட்சி வெற்றி பெற வாய்ப்புள்ளதா என்று தெரியவரும் என்று கூறியுள்ளனர்.