ஜிமெயிலில் நிரந்தரமாக அழிக்கப்பட்ட மின்னஞ்சல்களை மேஈண்டும் எப்படி எடுப்பது என்று பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் நம்மில் அதிகமானவர்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையாக ஜிமெயில் காணப்படுகின்றது. இந்த சேவையில் மின்னஞ்சல்களை அழிக்கக்கூடிய வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வாறு அழிக்கப்படும் மின்னஞ்சல்கள் Trash பகுதிக்குள் சென்றால் அவற்றினை மீட்டுக் கொள்ள முடியும். அப்படி இல்லாமல் நிரந்தரமாகவும் மின்னஞ்சல்கள் அழிக்கப்படும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றது. இப்படி அழிக்கப்பட்ட மின்னஞ்சல்களை மீண்டும் தேவைப்படின் மீட்டெடுப்பதற்கான வழி இருப்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஜிமெயில் சேவையிலேயே இந்த வசதி காணப்படுகின்றது. இந்த சேவையினைப் பெறுவதற்கு https://support.google.com/mail/workflow/9317561?visit_id=637412871676228046-482473334&rd=1 என்கிற முகரிக்கு செல்ல வேண்டும். பின்னர் மின்னஞ்சல் மீட்கப்பட வேண்டிய கணக்கினுள் சென்று LOGIN செய்து continue என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அழிக்கப்பட்ட மின்னஞ்சல்கள் மீட்கப்பட்டிருக்கும். எப்படி இருப்பினும் 30 நாட்களுக்குள் அழிக்கப்பட்ட மின்னஞ்சல்களையே நாம் இப்படி மீட்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.