Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா! “ஒரு மீன் 13 கோடி” ஏலம் எடுத்த ஹோட்டல் உரிமையாளர்…. ஆச்சர்ய சம்பவம்…!!

ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் 13 கோடி கொடுத்து ஒரு மீனை ஏலத்துக்கு எடுத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய நாடான ஜப்பானில் டுனா கிங் என்றழைக்கப்படும் கியோஷி கிமுரா என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் டுனா மீன் ஏலத்தில், அதிக விலை கொடுத்து ஏலம் எடுத்பதில் பிரபலமானவர் ஆவார். அதேபோல் இந்த வருடமும் மீன்கள் விற்பனைக்கு வந்துள்ளது. அவ்வாறு வந்த 276கிலோ கிராம் எடை கொண்ட பெரிய அளவிலான மீன் ஒன்று 193.2 மில்லியன் தொகைக்கு ஏலம் போயுள்ளது.

அதாவது அமெரிக்க டாலர் அளவில் இது 1.8 மில்லியன் ஆகும். இந்திய மதிப்புக்கு இந்த மீன் சுமார் 13 கோடி ரூபாய்க்கு நிகரானது ஆகும். இந்த மீனை ஏலம் எடுத்தவருடைய புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கியோஷி கிமுரா இதனை பலத்த போட்டிகளுக்கு மத்தியில் ஏலத்தில் எடுத்துள்ளார்.

Categories

Tech |