இந்தியாவில் டீக்கடை, பூக்கடை வைத்திருந்தவர்கள் எல்லாம் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்துள்ளதாக கமல்ஹாசன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இவர்களுக்கு மத்தியில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனையடுத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் கூறுகையில், இந்தியாவில் டீ கடை வைத்திருந்தவர், பூக்கடை வைத்திருந்தவர் எல்லாம் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்துள்ளனர். மக்கள் எப்போது அடுத்த தலைமுறைக்காவது சொத்து சேர்ப்பது. கொள்ளையனே வெளியேறு என எங்களுடன் சேர்ந்து உங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என கூறியுள்ளார்.