தமிழகத்தில் திமுக இனி ஆட்சிக்கு வரக்கூடாது என மக்கள் உறுதியாக உள்ளதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக திமுக மற்றும் அதிமுக இடையே தேர்தல் பிரசாரத்தின் போது கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பாஜக கூட்டமொன்றில் பேசிய குஷ்பு, திமுக நடத்தியது பொற்கால ஆட்சி அல்ல, கற்கால ஆட்சி என்று விமர்சித்துள்ளார். குடும்ப அரசியல் நடத்தி வரும் திமுக இனி ஆட்சிக்கு வரக்கூடாது என மக்கள் உறுதியாக உள்ளதாக கூறிய குஷ்பு, காங்கிரஸ் கட்சிக்கு தலைவரே இல்லை தலைவராக இருந்தவரும் அவ்வபோது நாட்டைவிட்டு போய் விடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.