Categories
உலக செய்திகள்

“கொரோனா தடுப்பூசி” போட்டுக்கொண்ட மருத்துவர்…. “30 நிமிடத்தில்” தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி…!!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் மருத்துவர் ஒருவர்  உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் அதற்கான தடுப்பு மருந்துகளுக்கு அவசர அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசி, ஆக்ஸ்போர்ட் தடுப்பு  மருந்துகளுக்கு பல்வேறு நாடுகள் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் பைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் மருத்துவர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்காவில் பைசர் தடுப்பூசிகளை அனுமதி அளிக்கப்பட்து . எனவே அங்கு முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தபடுகின்றது.

இந்நிலையில் பெண் டாக்டர் ஒருவருக்கு தடுப்பூசி போட்டுக் கொண்ட 30 நிமிடத்தில் கடுமையான பக்க விளைவு ஏற்பட்டுள்ளது. எனவே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தசை பலவீனம், சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த மருத்துவருக்கு ஏற்கனவே பிற மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது ஒவ்வாமை உள்ளிட்ட பாதிப்புகள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அந்த பெண் மருத்துவர் தற்போது நலமாக இருக்கிறார். இருப்பினும்  எதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டது ?என்று மருத்துவர்கள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |