Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“பெண்களை ஏமாற்றிய போலி சாமியார் கைது” தொடரும் விசாரணை ..!!

காஞ்சிபுர மாவட்டத்தில் பெண்களை ஏமாற்றி வந்த போலி சாமியார் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது .

திண்டிவனம் அருகே உள்ள ஓம்பு ஊரில் வசித்து வருபவர் செல்வமணி .இவர் மாந்திரீகம் செய்வதாக கூறி பல பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வடமலை பாக்கம் என்னும் கிராமத்திற்கு சென்று உள்ளார் .

அங்கே இவரிடம் மாந்திரீகம் செய்ய வந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து இளம் பெண் காவல்துறையில் புகார் அளிக்க போலி சாமியாரான செல்வமணியையும்  அவருக்கு உடந்தையாக இருந்த ஹேமா என்ற பெண்மணியையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |