Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் கிளிகள் விற்பனை… வசமாக மாட்டிக் கொண்ட டாக்டர்… போலீஸ் அதிரடி…!!!

சென்னையில் ஆன்லைன் மற்றும் சந்தைகளில் பாதுகாக்கப்பட்ட மலை கிளைகள் விற்றதால் 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆன்லைன் மூலமும், சந்தைகளிலும் மலைப் பிரதேசங்களில் வாழும் கிளிகள் விற்பனை செய்யப்பட்டது. கிண்டி வனத்துறையினருக்கு இதுபற்றிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை சந்தைகளில் கிண்டி வனசரகர் கிளமெண்ட் எடிசன் தலைமையில் ஆய்வு செய்தனர்.

சோதனையில் சாந்தோம், மஸ்கான் சாவடி பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன மலைக்கிளி குஞ்சுகள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டு பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பின் ராயபுரத்தில் உள்ள அக்குபஞ்சர் டாக்டர் முகமது ரமலி என்பவரின் வீட்டிலும் சோதனை செய்தனர். அப்போது அங்கு மலைக்கிளி குஞ்சுகள் இருப்பது தெரியவந்தது.

வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 ஆம் ஆண்டு முதல் மலைக்கிளிகள் பாதுகாப்பு கொண்டதாக அறிவிக்கப்பட்டது. மலை கிளிகள் டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய ஜனவரி மாதம் வரை குஞ்சு பொரிக்கும். இதனை விற்பனைக்காக எடுத்து வந்து ஒரு ஜோடி 2000 வரை விற்று வந்துள்ளனர். ஆன்லைன் மற்றும் சந்தைகளில் நான்காயிரத்திற்கும் விற்றுள்ளனர்.

இதையடுத்து இந்த செயலில் ஈடுபட்ட டாக்டர் முகமது ரமலி, முத்து செல்வம் (20), வண்ணாரப்பேட்டை சேர்ந்த ஜெகன் (31), தண்டையார்பேட்டை சேர்ந்த சதீஷ்குமார் (27), பாரிமுனை யை சேர்ந்த கார்த்திக் (35) ஆகிய 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில் அவர்களிடமிருந்து 53 மழை கிரி குஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன்பின் வனத்துறையினர் கூறுகையில்,மலைக்கிளிகளை விற்பனை செய்வதும் வீடுகளில் வளர்ப்பதும் சட்டப்படி குற்றம். அதனை வைத்திருப்பவர்கள் தானாக முன்வந்து வனத்துறையிடம் கொடுத்துவிட்டால் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம். நாங்களே கண்டுபிடித்து கைப்பற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Categories

Tech |