ராஜஸ்தானில் காகங்களில் பறவை காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகின்றது. இதையடுத்து பிரிட்டனில் பரவிய உருமாறிய கொரோனா தற்போது பல நாடுகளிலும் பரவி வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இந்த இரண்டு வைரஸிலிருந்தே மீண்டு வரவே மக்கள் பல கட்டமாக போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த பாதிப்பிலிருந்து ஓய்வதற்குள் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆபத்தான வைரஸ் பரவுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பல்வேறு இடங்களில் காகங்கள் உயிரிழந்துள்ளன..
இந்நிலையில் இந்த இறந்த காகங்களில் அபாயகரமான வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காகங்கள் மட்டுமல்லாமல் மேலும் சில பறவைகளும் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜலவார், பாரன் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட காகங்கள் திடீரென உயிரிழந்துள்ளன. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த பிரச்சினை எங்கு சென்று முடிய போகின்றதோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.