மருத்துவமனையின் சுகாதார ஊழியர் ஒருவர் தன் காதலை வெளிப்படுத்திய விதம் பாராட்டுக்களை பெற்றுவருகிறது.
உலகில் உள்ள காதலர்கள் பலர் தங்கள் காதலியிடம் பல்வேறு விதமாக காதலை வெளிப்படுத்துவர். அதாவது உயரம் உள்ள இடங்களில் காதலை வெளிப்படுத்துவது, கிரிக்கெட் மைதானங்களில் காதலை வெளிப்படுத்தியது போன்ற சம்பவங்கள் சமீபத்தில் நடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதார ஊழியர் ஒருவர் அவர் காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
அதாவது, இத்தாலியிலுள்ள புகலியாவில் இருக்கும் ஒஸ்டுனி என்ற மருத்துவமனையின் சுகாதாரப்பணியாளர் கியூசெப் புங்கெண்டே. இவர் தற்போது கொரோனா வார்டில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அயராமல் பணி செய்து கொண்டிருக்கும் இவர் தன் காதலியிடம் காதலை வெளிப்படுத்த விரும்பியுள்ளார். இதனால் தான் அணிந்திருந்த கொரோனா பாதுகாப்பு உடையின் பின்புறத்தில் “கார்மெலி என்னை திருமணம் செய்துகொள்வாயா?” மேலும் அதற்கு கீழ் ஆம் அல்லது இல்லை என்று எழுதியிருந்தார்.
இதனை அவர் தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இவரின் கோரிக்கையை அவரின் காதலி ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் கியூசெப் இன்ப அதிர்ச்சியில் உள்ளார். மேலும் கொரோனா வார்டில் அயராது உழைக்கும் நேரத்திலும் தன் காதலை வெளிப்படுத்தியதற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.