விஜய் மற்றும் சிம்புவின் கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் பல மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் தான் திரையரங்குகள் திறக்கப்பட்டன. இதையடுத்து கொரோனா பிரச்சினை இன்னும் தீராத நிலையில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் படங்கள் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் 50 சதவீத இருக்கைகள் மட்டும் பயன்படுத்தினால் கண்டிப்பாக வசூலில் நஷ்டம் ஏற்படும். எனவே நடிகர் விஜய் தமிழக முதல்வர் எடப்பாடியை சந்தித்து தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார். விஜய்யின் சந்திப்பு பிறகு முதல்வர் 50 சதவீத இருக்கை தான் தியேட்டரில் பயன்படுத்தவேண்டும் என்று அறிவித்தார். எனவே விஜய்யின் கொருக்கை நிராகரிக்கப்பட்டதா? என கேள்வி எழும்பி வந்தது. இதையடுத்து 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதிக்குமாறு தியேட்டர் உரிமையாளர்களும், நடிகர் சிம்புவும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பான அரசாணை வெளியிட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் சந்தோஷத்தில் உள்ளனர். இவ்வாறு அரசு அனுமதி அளித்ததால் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து சென்று படத்தை பார்க்க முடியும். மேலும் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் வசூல் வேட்டையில் எந்த பிரச்சினையும் இருக்காது. இனிமேல் பல படங்களை தைரியமாக திரையரங்குகளில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.