கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியானது குயின்ஸ்லாந்து தலைநகர் பிரிஸ்பேனில் நடைபெறுகிறது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, ரிஷப் பந்த், நவ்தீப் சைனி ஆகியோர் பாதுகாப்பு வளையத்தை மீறியதாக எழுந்த புகாரையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து இது குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளால் தேர்வு செய்யப்பட்ட குயின்ஸ்லாந்து சுகாதார துறை அமைச்சர் ஹாஸ்பேட்ஸ் கூறுகையில், இந்தியர்களால் விதிமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால், அவர்கள் இங்கு வரவேண்டாம் என்றார்.
இதையடுத்து இந்திய வீரர்கள் தங்கள் தனிமையை விரும்பவில்லை என்றும், மைதானத்திற்கு செல்வதை தவிர்த்து, மற்ற நேரங்களில் விடுதியில் இருக்க வேண்டும் என்றால், தாங்கள் பிரிஸ்பேன் போக விரும்பவில்லை. வேறு நகரத்தில் விளையாடி விட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளது சலசலப்பை உருவாக்கியுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் ஆஸ்திரேலிய அணி பிரிஸ்பேனிலே விளையாட விரும்புவதாக மேத்யூ வேட் தெரிவித்துள்ளார்.