Categories
உலக செய்திகள்

2021ல் உள்ள அதிசயம்… 50 ஆண்டை திரும்பி பார்க்க வைத்த காலண்டர்…!!!

கடந்த 1971-ஆம் ஆண்டு காலண்டரும் 2021 ஆம் ஆண்டு காலண்டரும் ஒரே மாதிரியாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனித வாழ்க்கை சரித்திரத்தில் மறக்க முடியாத பதிவை 2020ம் ஆண்டு ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பரவல், புயல்களின் தொடர் தாக்குதல் என சாமானியர்கள் முதல் செல்வந்தர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சுமார் ஒரு வருடம் வீட்டிலேயே முடக்கி வைத்தது.  மேலும் பல முக்கிய தலைவர்களின் உயிரையும் பறித்தது. பலர் வறுமையிலும், பலர் உறவுகளை இழந்த சோகத்திலும், பலர் வேலையிழப்பிலும் அவதிப்பட்டனர். தொழில்கள் முடங்கியதாலும், வேலைவாய்ப்புகள் குறைந்ததாலும், பொதுமக்கள் மட்டுமின்றி, பல்வேறு தொழில் நிறுவனங்களும், நாடுகளும் பொருளாதாரத்தில் முடங்கிப் போயின.

இந்த நிலையில் 2021ம் ஆண்டு பிறந்துள்ளது. இந்த ஆண்டு ஆறுதலான ஆண்டாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஏக்கமாகஉள்ளது. இதற்கிடையே 2021ம் ஆண்டு காலண்டர் அதிசய ஆண்டாக அமைந்துள்ளது.  கடந்த ஐம்பது வருடத்திற்கு முன்பு உள்ள 1971 ம் ஆண்டு காலண்டரும், 2021ம் ஆண்டு காலண்டரும் ஒரே மாதிரி அமைந்துள்ளது. ஒருவித அதிசயத்தையும், ஆச்சரியத்தையும், ஏற்படுத்தியுள்ளது. இரு ஆண்டும் நாள், தேதி ஒத்திருக்கிறது. பண்டிகை நாள்களும் ஓரளவு ஒத்திருக்கிறது.

மேலும் 50 ஆண்டுகளுக்குப் பின் அதே காலண்டர் திரும்பி வந்தாலும் மனித வாழ்வும், நாட்டு நடப்பும், கலாச்சாரமும் முற்றிலும் மாறியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். 1971ம் ஆண்டைப் போல மனித வாழ்க்கையை திரும்பப் பெற முடியாது. ஆனால் 2021ல் புது சரித்திரம் படைக்க முடியும்.

Categories

Tech |