Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும் அரசு அதிரடி அறிவிப்பு… போடு ரகிட ரகிட…!!!

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதனால் தற்போது மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம் 50 சதவீத இரு கைகளுடன் திரையரங்குகள் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.

இருந்தாலும் திரையரங்குகளில் மக்களின் கூட்டம் அதிக அளவு காணப்படவில்லை. அதனால் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் 100 சதவீத இருக்கைக்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, திரையரங்குகளில் பார்வையாளர்களின் அனுமதியை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |