கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் பலியானோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
கனடாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஆறு லட்சத்தை தாண்டியுள்ளது. அதாவது கனடாவில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,66,086 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 15, 880 ஆக அதிகரித்துள்ளது. கனடாவில் உள்ள ஒன்றாரியோ என்ற மாகாணத்தில் அதிக மக்கள்தொகை உள்ளது. இந்நிலையில் நேற்று புதியதாக 2,974 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா பாதிப்பால் 25 பேர் பலியாகியுள்ளனர். கடந்த வாரத்தில் ஒரு நாளில் சராசரியாக 2792 நபர்களுக்கு குரோனோ அதிகரித்ததுடன் ஒரேநாளில் 3363 பேர் பாதிப்படைந்துள்ளனர் இந்நிலையில் மற்றொரு அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான கியூபெக்கில் கடந்த 2020 ஆம் வருடம் டிசம்பர் 31க்கு பின்பு 7663 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதில் 120 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.