Categories
சினிமா தமிழ் சினிமா

காமெடி நடிகர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு… உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா?… ரசிகர்கள் ஆச்சர்யம்…!!!

பிரபல காமெடி நடிகர் சாம்ஸ் தனது மகன் யோஹன் திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ‌.

தமிழ் திரையுலகில் கடந்த 20 வருடங்களாக காமெடி கதாபாத்திரத்தில் கலக்கி வருபவர் நடிகர் சாம்ஸ் . இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவரது மகன் யோஹன் திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் ‌. அதில் ‘இனிப்பான செய்தி என் மகன் யோஹன் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சியும், தனியார் திரைப்பட கல்லூரியில் இயக்குனர் பயிற்சியையும் முடித்து விட்டு தற்போது இயக்குனர் ராம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய படி நடிகனாக களமிறங்க தயாராகி விட்டார் .

உங்கள் ஆசி மற்றும் ஆதரவை வேண்டுகிறேன்’ என பதிவிட்டுள்ளார். மேலும் அவரது மகன் யோஹனின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் . இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா! என ஆச்சரியத்துடன் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உங்கள் மகன் திரையுலகில் வெற்றி பெற வாழ்த்துகிறோம் எனவும் கூறியுள்ளனர் .

Categories

Tech |