Categories
மாநில செய்திகள்

“காவல்துறையின் 3வது கண்” சிசிடிவி கேமரா…. உலகளவில் சென்னை முதலிடம்…!!

காவல்துறையினரின் 3வது கண் என்னும் திட்டத்தின் கீழ் சென்னை உலக அளவில் முதல்  பிடித்துள்ளது.

சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் ஒன்று உலக நாடுகளிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட 138 நகரங்களில் சிசிடிவி தொடர்பான கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 657  கேமராக்களை கொண்ட நகரங்களிலேயே சென்னை முதலிடத்தில் உள்ளது. மேலும் இந்த கணக்கெடுப்பில் உலகத்திலேயே அதிக சிசிடிவி கேமராக்களை கொண்ட நகரமாக சீனாவில் உள்ள பீஜிங் நகரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு சுமார் 10 லட்சம் சிசிடிவி கேமராக்கள் இருபினும், சதுர கிலோ மீட்டருக்கு 278 சிசிடிவி கேமராக்கள் மட்டுமே இருக்கின்றன. மேலும் லண்டன் நகரில் 6.6 லட்சம் சிசிடிவி கேமராக்கள் இருக்கின்றன.

ஆனால் சதுர கிலோ மீட்டருக்கு 399 கேமராக்கள் மட்டுமே இருக்கின்றன. ஆனால் இந்தியாவைப் பொருத்த வரையில் சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் காணப்படுகிறது. இதில் 2,80, 000 சிசிடி கேமராக்களை கொண்ட சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சதுர கிலோ மீட்டருக்கு 657 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. இந்த கணக்கெடுப்பு விவரங்களால் சென்னை புறநகர் காவல்துறைக்கு கூடுதல் பெருமை கிடைத்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் கேமராக்கள் அமைப்பதால் குற்றங்களும் குறைந்துள்ளதாக இந்த கணக்கீட்டின் மூலம் தெரியவந்துள்ளது.

Categories

Tech |