Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“காதல் திருமணம்” முடிந்த 4 ஆண்டுகளில்… அடிக்கடி தகராறு… விரக்தியில் பெண் எடுத்த முடிவு…!!

குடும்பத் தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வலையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் மாரிமுத்து- பானுப்பிரியா. இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியருக்கு  இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் தம்பதியருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பானுப்பிரியா தனது கணவரிடம் கோபித்து கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை நீண்ட நேரமாகியும் பானுப்பிரியா கதவை  திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது  பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன்  கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பானுப்ரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பானுப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |