Categories
மாவட்ட செய்திகள்

சேலத்தில் 489 ஆண்டுகளுக்கு…. முந்தைய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு…!!

கிராமம் ஒன்றில் 489 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அகழ்வாராய்ச்சியாளர்களால் தற்போது பல இடங்களில் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இதில் முன் காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் வாழ்ந்த அரண்மனைகள், மண் தாழிகள், கோவில் சிற்பங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தற்போது கூட தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பரும்பில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. இதில ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட்டன.

இந்நிலையில் சேலம் அருகே உலிபுரம் என்ற கிராமத்தில் 489 ஆண்டுகளுக்கு முந்தைய இரு கல்வெட்டுகளும், இரு நவகண்ட சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் அப்பகுதியில் வாழ்ந்த மக்களின் கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம் என்று கூறிய ஆய்வாளர்கள், இந்த பகுதியில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டால் பல வரலாற்று தடயங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளனர்.

Categories

Tech |