தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிள் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் தொடர்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இந் நிலையில் 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந் நிலையில் திரையரங்குகளில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் பார்வையாளர்களின் எண்ணிக்கையை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.மேலும் திரை அறங்குகளில் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக இதே கோரிக்கையை வைக்க தமிழக முதல்வரை நடிகர் விஜய் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.