நீலகிரி அருகே இறந்த யானைக் குட்டியின் உடல் அருகேயே நான்கு நாட்களாக யானைகள் காத்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரியில் உள்ள முத்தங்காஸ் சரணாலயத்தில் ஒட்டிய குறிச்சியாடுவன பகுதியில் பிறந்த இரண்டே மாதமான யானை குட்டி நான்கு நாட்களுக்கு முன்பு இறந்து கிடந்தது. அதன் அருகே தாய் யானை உட்பட நன்கு யானைகள் உணவு, தண்ணீரின்றி அருகியே காத்துக் கிடக்கின்றனர். ரோந்து செல்லும் போது இதனை பார்த்த வனத்துறையினர் யானைகளை விரட்டி, குட்டி யானையின் உடலை கைப்பற்றி மருத்துவ ஆய்வுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஆனால் பட்டாசு வெடித்தும் அந்த யானைகளை விரட்ட முடியாத நிலை நிலவுகிறது. யானை குட்டின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த பிறகே இறந்தற்க்குகான காரணம் தெரியவரும் எனறும் கேரள வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். குட்டியானை மிதான யானைகளின் பாச போராட்டம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.