கேரளாவில் 2021 ஆம் ஆண்டு முதல் ரிலையன்ஸ் ஜியோ இணைய சேவை நிறுத்தப்படும் என்ற தகவல் வைரலாகி வருகிறது.
கேரளாவில் 2021 முதல் ரிலையன்ஸ் ஜியோ சேவைகளை நிறுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதுமட்டுமின்றி அரசின் நெட்வொர்க் மற்றும் மொபைல் போன்களை ஜியோவை விட மிகக்குறைந்த கட்டணத்தில் கேரள அரசு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.
வைரலாகும் பதிவுகளில், மோடி மற்றும் அம்பானிக்கு பதிலடி கொடுக்கும் அதிரடி நடவடிக்கையை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது.2021 ஆம் ஆண்டு முதல் கேரளாவில் ஜியோ சேவைகள் நிறுத்தப்படும். கேரள அரசின் சொந்த நெட்வொர்க், கேரளா பைபர் நெட் மற்றும் போன் ஜியோவை விட பாதி கட்டணம் குறைத்து வழங்கப்படுகிறது என்ற பதிவுகள் வைரலாகி கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த வைரல் தகவல்களை ஆய்வு செய்தபோது,கேரள அரசு ஜியோவிற்கு தடை விதிக்கவில்லை என்பதும், புதிய இணைய சேவையையும் தொடங்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதுபோன்று தகவல் அடங்கிய செய்தி ஒன்றும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் கேரள அரசு சொந்தமாக நெட்வொர்க் சேவையை துவங்குவது பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதனால் வைரலாகும் தகவல்களில் உள்ள எந்த விவரங்களும் உண்மை கிடையாது என்று உறுதியானது.