Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவுடன் 20 வருடங்களுக்குப் பின் இணையும் பிரபல நடிகர்… யார் தெரியுமா?…!!!

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யாவுடன் பிரபல நடிகர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் . இவர் நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளியான சூரரைப் போற்று ரசிகர்களாலும் , விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது . இதையடுத்து நடிகர் சூர்யா ‘நவரசா’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார் . இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்திலும் நடிக்க உள்ளார் . மேலும் இவர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் நடிக்க உள்ளார் . இந்தப் படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க டி. இமான் இசையமைக்கிறார்.

Venkatesh: Tamil actor Rajkiran in Ram Charan's film | Telugu Movie News -  Times of India

இந்நிலையில் ‘சூர்யா 40’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ராஜ்கிரண் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . நடிகர் சூர்யா மற்றும் நடிகர் ராஜ்கிரன் இருவரும் இணைந்து கடந்த 2001ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான ‘நந்தா’ படத்தில் நடித்திருந்தனர் ‌. தற்போது 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இவர்கள் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது .மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |