நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் தயாராகி வந்த ‘ரேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருபவர் நடிகர் சிபி சத்யராஜ். தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ரேஞ்சர்’ . ஜாக்சன் துரை படத்தை இயக்கிய தரணிதரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரம்யா நம்பீசன் ,மதுஷாலினி ,காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர் . மகாராஷ்டிரா மாநிலம் யாவாத்மல் மாவட்டத்தில் ஆவ்னி என்னும் புலி பல மனிதர்களை உயிருடன் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது .
இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ரேஞ்சர் படம் தயாராகியுள்ளது . சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் அடர்ந்த காட்டில் கையில் துப்பாக்கியுடன் சிபிராஜ் நிற்க கூண்டில் புலி இருப்பது போல் அமைந்திருந்தது. இந்நிலையில் ரேஞ்சர் படத்தின் ஒட்டுமொத்த நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது . மேலும் சிபிராஜ் நடிப்பில் கபடதாரி படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது .