மூதாட்டி ஒருவரை 16 வயது சிறுவன் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 62 வயது ஒருவர் மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் இறந்துள்ளதால் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் மோப்பநாய் உதவியோடு விசாரணையை தொடங்கியுள்ளனர். அப்போது மோப்ப நாய் மூதாட்டியின் வீட்டின் அருகில் சுற்றி சுற்றி வந்துள்ளது.
இதையடுத்து காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் சோதனை செய்துள்ளனர். அப்போது மூதாட்டியின் வீட்டின் அருகில் 16 வயது சிறுவன் ஒருவன் சுற்றி திரிந்துள்ளான். அந்த சிறுவன் அந்த பகுதியை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் காவல்துறை அவரிடம் நடத்திய விசாரணையின் போது சிறுவன் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். எனவே அவரை தனியாக அழைத்துச் சென்று காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது சிறுவன் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். மூதாட்டி எப்போதும் தன்னை திட்டிக் கொண்டே இருந்ததால் பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் கழுத்தை நெரித்தும் கொலை செய்ததாகவும் அவரிடம் இருந்த 3 பவுன் நகை மற்றும் செல்போனை எடுத்துச் சென்றதாகவும் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 16 வயது சிறுவன் ஒருவன் 62 வயது மூதாட்டியை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.