Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திருமணத்திற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில்… பட்டதாரி பெண்ணிற்கு நேர்ந்த துயர சம்பவம்…!!

கிணற்றில் தவறி விழுந்து பட்டதாரி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் விவசாயத் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகள் நிலா என்கிற சர்மிளா(24). இவர் எம்எஸ்சி முடித்துவிட்டு வீட்டு வேலைகளை கவனித்து வருகிறார்.  இந்நிலையில் சர்மிளா நேற்று பசுமாட்டை மேய்ச்சலுக்காக  தங்களுடைய நிலத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு  திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் சர்மிளாவை  தேடி விவசாய நிலத்திற்கு சென்றனர்.

அப்போது பசு மாடு மட்டும் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. சர்மிளாவை காணாததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் அவரை தேடியுள்ளனர். அப்போது விளை நிலத்தில் உள்ள கிணற்றில் சர்மிளா பிணமாக மிதப்பதை  பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதறி அழுதுள்ளனர். இதுகுறித்து தீயணைப்பு நிலைய வீரர்களுக்கும்  காவல்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இறங்கி சர்மிளாவின் சடலத்தை மீட்டனர். பின்னர் சர்மிளாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். சர்மிளாவின் திருமணத்திற்கு 15 நாட்களே உள்ள நிலையில் அவர் பசுமாட்டை மேய்ச்சலுக்காக விவசாய நிலத்தில் அழைத்துச் சென்ற போது கால் தவறி கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |