53 வயது முதியவர் ஒருவர் 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் வசிப்பவர் சம்பத்( 53). இவர் அதே பகுதியில் ஹாலோபிளாக் செய்யும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 2 வயது குழந்தை உட்பட சில குழந்தைகள் இவருடன் விளையாடுவதற்காக வீட்டிற்கு செல்வது வழக்கம். இதேபோன்று சம்பவத்தன்று குழந்தைகள் விளையாட சென்றுள்ளனர். அப்போது திடீரென குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அந்த 2 வயது குழந்தையின் தாய் சம்பத் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது கொடூர காமுகன் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்ததுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் தனது குழந்தையை அந்த காமுகனிடமிருந்து காப்பாற்றிக் கூட்டிச் சென்றுள்ளார். இதையடுத்து அந்த தாய் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .அதன் அடிப்படையில் காவல்துறையினர் போக்சோவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.