கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நடிகர் சிம்பு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் .
கடந்த மார்ச் மாதம் கொரோணா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது . வருகிற பொங்கல் தினத்தில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இதனால் திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி வழங்குமாறு நடிகர் விஜய் கடந்த வாரம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார் .
எங்களது கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்த, தமிழ் திரையுலகிற்கு நம்பிக்கை ஒளியை ஏற்றி வைத்த மாண்புமிகு தமிழக முதல்வருக்கு @CMOTamilNadu
நன்றி!#MasterFilm #Eeswaran #SpreadLove #SilambarasanTR pic.twitter.com/0SOaAbqQeX— Silambarasan TR (@SilambarasanTR_) January 4, 2021
மேலும் நடிகர் சிம்பு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் . இந்நிலையில் தமிழக அரசு திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி வழங்கியுள்ளது . இதற்கு நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ‘எங்களது கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்த ,தமிழ் திரையுலகிற்கு நம்பிக்கை ஒளியை ஏற்றி வைத்த மாண்புமிகு தமிழக முதல்வருக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.