Categories
உலக செய்திகள்

கைகள் கட்டப்பட்ட நிலையில்…. சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!

இளம்பெண் ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் முகத்தில் பிளாஸ்டிக் கவருடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

துருக்கியை சேர்ந்த இளம்பெண் கிறிஸ்டினா நோவிட்ஸ்கயா (30). இப்பெண் அவரின் வீட்டில் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில் முகத்தில் பிளாஸ்டிக் கவர் மூடப்பட்டு இறந்து கிடந்துள்ளார். மேலும் இவர் இறந்து சில நாட்கள் கடந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இவர் உக்ரேனிய மொழிபெயர்ப்பாளர் மற்றும் நடன பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் கிறிஸ்டினா உடல் கண்டெடுக்கப்பட்ட போது அவரின் வீடு உள்பக்கமாக பூட்டி இருந்துள்ளது. மேலும் ஜன்னல் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டிருந்துள்ளன. எனவே காவல்துறையினர் கிறிஸ்டினா தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.

மேலும் இது குறித்து அவரது தோழிகள் கூறுகையில், கிறிஸ்டினா வாழ்வை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்ற விருப்பமுடையவர். இதனால் அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர். மேலும் கிரிஸ்டினா அவரின் நடவடிக்கைகளை ரகசியமாகவே வைத்திருப்பாராம். இதனைத்தொடர்ந்து கிறிஸ்டினா உயிரழந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ள அவரின்  நண்பர்கள் இவரது மரணத்துக்கு முக்கிய புள்ளி ஒருவரின் தொடர்பு இருக்கலாம் என்று கருதுவதாக கூறியுள்ளனர். மேலும் கிறிஸ்டினாவின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |