Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு … தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகையாக தற்காலிக ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில்: “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சி, டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு தற்காலிக மிகை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாட சிறப்பு மிகை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

உள்ளாட்சி மன்ற பணியாளர்கள் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். திங்கள் ஒன்றுக்கு 30 நாட்கள் என்று அடிப்படையில் 3000 என்ற உச்ச வரம்புக்கு உட்பட்டு ஊதியம் வழங்கப்படும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்” எனவும் அறிவித்துள்ளார்.

Categories

Tech |