Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஓட்டை பிரித்து திருட முயற்சி… கடையை காப்பாற்றிய மர ரீப்பர்… பரபரப்பை ஏற்ப்படுத்திய சம்பவம்…!!

கடையின் ஓட்டை பிரித்து கொள்ளை அடிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் முக்கன்  செட்டி தெருவில் முகமது இசாக் என்பவர் வசித்து வருகிறார். இவர் வல்லம் கடைவீதியில் பெட்டிக்கடை மற்றும் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு கடையை அடைத்துவிட்டு மறுநாள் காலை சென்று கடையை திறந்தபோது கடைக்குள் மழைநீர் தேங்கி கிடப்பதை கண்டார். அதன் பின் மேலே பார்த்தபோது கடையில் உள்ள ஓடுகள் பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்நிலையில் மர்ம நபர்கள் திருடுவதற்காக திட்டமிட்டு இரவில் கடையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்க முயற்சி செய்து உள்ளனர். ஆனால் மர ரீப்பேர் ஆனது ஓடுகளின் கீழே முழுமையாக இருந்ததால் அவர்களால் உள்ளே இறங்க முடியாமல் ஓடுகளை அப்படியே வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து முகமது இசாக் வல்லம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து திருட முயற்சித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |