Categories
மாவட்ட செய்திகள்

மகி மலையாறில் குளித்த இளைஞர்கள்… எதிர்பாராதவிதமாக… ஆற்றில் நேர்ந்த துயர சம்பவம்…!!

ஆற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் பரமகுரு. இவர் சீயக்காய் பொடி தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று  தலைஞாயிறு பகுதியில் குடிசை தொழில் பற்றி நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டார் .  மேலும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட தனது நண்பர்களான கிருஷ்ணன்(36), திவ்யா(22), பிரவீன்(24) ஆகியோரை விருந்தாளிகளாக வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் வெளியூரிலிருந்து வந்த மூவரும் ஊரை சுற்றி பார்க்க சென்றுள்ளனர்.

அப்போது அனந்தமங்கலம் மகி மலையாறு சற்று பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திவ்யாவை கரையில் நிற்க வைத்துவிட்டு பிரவீனும் கிருஷ்ணனும்  ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக பிரவீனும்  கிருஷ்ணனும் தண்ணீரில் மூழ்கினர். இதை கண்டு அச்சமடைந்து திவ்யா சத்தம் போட்டுள்ளார். ஆனால் அவர் அழைத்தது யாருக்கும் கேட்காததால் கிராமத்திற்கு ஓடிச் சென்று பொதுமக்களிடம் உதவி கேட்டுள்ளார்.

இதையடுத்து  கிராம மக்கள் விரைந்து சென்று ஆற்றில் மூழ்கிய இரண்டு நபர்களையும் தேடினர் . ஆனால் இருவரும் கிடைக்காததால் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்களுக்கு  விரைந்து சென்று நீரில் மூழ்கியவர்களின்  உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர் . ஆற்றிலிருந்து பிரவீன் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் கிருஷ்ணனை தேடும் பணியில் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |