Categories
உலக செய்திகள்

ஈரான் சிறைபிடித்துள்ள…. எண்ணெய் கப்பல்… எந்த நாட்டுடையது தெரியுமா…??

தென் கொரியாவின் எண்ணெய் கப்பலை ஈரான் சிறைபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. 

சவுதி அரேபியாவிலிருந்து ஐக்கிய அரபின் அமீரகத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த தென்கொரியாவின் எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது. மேலும் பாதுகாப்பு நிறுவனம் இது குறித்து கூறுகையில், ஐக்கிய அரபின் அமீரகத்தை நோக்கி எண்ணெய் கப்பல் பயணம் செய்து கொண்டிருக்கையில் ஈரான் கடற்பகுதிக்கு சென்றுள்ளதால் சிறைபிடித்து இருக்கலாம் என்று கூறியுள்ளது. இந்நிலையில், வளைகுடாவை ரசாயனங்களால் மாசுபடுத்திய குற்றத்திற்காக நாட்டின் கடற்படையானது தென் கொரியாவின் MT Hankak chemi என்ற கப்பலை கைப்பற்றியுள்ளது என்றும் ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் marine traffic.com செயற்கைக்கோளின் தகவல்படி திங்கட்கிழமை பிற்பகலில் ஈரானின் Bandar abbas என்ற நகரில் Mt hankak என்ற பகுதியில் இருப்பதாக காட்டியுள்ளது. மேலும் இந்த கப்பல் சவுதி அரேபியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் புஜைரா வரைக்கும் சென்றுள்ளது.  மேலும் கப்பலின் உரிமையாளர்களை உடனே தொடர்புகொள்ள முடியவில்லை. மேலும் அமெரிக்க கடற்படையின் ஐந்தாம் பிரிவின் செய்தி தொடர்பாளரான  Rebecca rebach என்பவர் அங்கிருக்கும் அதிகாரிகளின் நிலைமையை அறிந்துகொண்டு கண்காணித்து வருவதாக கூறியுள்ளார்.

Categories

Tech |