சென்னையில் டிஎன்பிஎஸ்சி என்ற பெயரில் போலி பணி ஒதுக்கீடு ஆணை வழங்கி பணமோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் டிஎன்பிஎஸ்சி மூலம் காலியாக உள்ள அரசு அலுவலகங்களில் பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தி அதன் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதை சில கும்பல்கள் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு சென்னையில் டிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி ஒதுக்கீடு ஆணை வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலி ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய தொடர்பாக வழக்கு பதிவு செய்து புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த நாகேந்திர ராவ் மற்றும் அவரது நண்பர் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்களிடம் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.