Categories
தேசிய செய்திகள்

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை… வெளியான செய்தி..!!

மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது கொரோனாவை அதிக வேகமாக பரவச்செய்யும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணைத் தலைவர் டாக்டர் பிரதீப் கபூர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு, பொது ஊடகம் ஆகியவற்றிற்கு ஆளாகியுள்ளது. இதுவரை இல்லாத நீண்டதொரு ஊரடங்கு பொது முடக்கத்தை நமது நாடு சந்தித்து வந்துள்ளது. கொரோனாவை இந்தியா கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் கடைசிக் கட்டத்திற்கு நகர்ந்து வருகின்றது.கொரோனா தடுப்பூசி எப்போது வரும், இந்த கொரோனாவுக்கு நிரந்தரமாக விடைகொடுக்கலாம் என்று நாட்டு மக்கள் அத்தனை பேரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் பொது சுகாதார நிபுணர் பிரதீப் கபூர் எச்சரிக்கை விடுத்து ட்விட்டரில் பேசியுள்ளார். “மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பதும் கொரோனாவை அதிவேகமாக பரப்பும் இதுபோன்ற இடங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |