பிள்ளைகள் ஆசைப்பட்டு கேட்கிறார்கள் என்பதற்காக பெற்றோர்கள் செய்து கொடுக்கும் நூடுல்ஸ் ஏற்படுத்தும் பாதிப்பு பற்றிய தொகுப்பு
குழந்தைகள் விரும்பி கேட்பதற்காக சாலையோரமாக அமைந்திருக்கும் ஃபாஸ்ட் புட் கடைகளில் இருந்து நாம் வாங்கிக் கொடுக்கும் நூடுல்ஸ் அவர்களின் உடலில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது என்பதை பெற்றோர்கள் சிலர் யோசிப்பதில்லை. அதுமட்டுமில்லாமல் வீட்டில் இரண்டு நிமிடத்தில் நாம் தயார் செய்யும் நூடுல்ஸில் கூட எந்த ஒரு நன்மையும் இல்லை.
செரிமான பிரச்சனை
மற்ற உணவுப் பொருட்களுடன் நூடுல்சை ஒப்பிடும் போது அது ஜீரணிப்பதற்கு அதிக நேரத்தை எடுக்கிறது. இரண்டு மணிநேரங்கள் ஆனாலும் நமது உடலில் நூடுல்ஸ் செரிமானமாகாமல் நெஞ்செரிச்சல், வயிற்றுப் போக்கு வயிற்றுவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
வலிமை இழப்பு
குழந்தைகள் நினைத்தபோதெல்லாம் நூடுல்ஸ் சாப்பிட்டால் அவர்களின் உடலில் ஊட்டச் சத்துக்கள் குறைந்து சோர்வு, வலிமை இன்மை, தலை சுற்றல் போன்ற பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும்.
நினைவாற்றல் இழப்பு
குழந்தைகளை மீண்டும் மீண்டும் நூடுல்ஸை கேட்க வைக்கும் அதன் சுவைக்கு முக்கியக் காரணம் மோனோசோடியம் குளுட்டமேட் . இந்த பொருளினால் இரண்டு நிமிடத்தில் குழந்தைகளை ஈர்க்கும் சுவையான நூடுல்ஸ் தயாராகிறது. ஆனால் இந்த பொருளினால் ஏற்படும் பக்கவிளைவுகள் யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது. அதாவது நரம்பு செல்களை சேதப்படுத்துவது, மூளை செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை இந்தப் பொருள் கொடுக்கிறது. இதனால் அதிகமாக நூடுல்ஸ் சாப்பிடும் குழந்தைகளுக்கு நினைவாற்றல் குறையும் அபாயம் உள்ளது.
புற்றுநோய் ஆபத்து
நூடுல்ஸ் நீண்டகாலம் கெட்டுவிடாமல் இருப்பதற்காக அதில் சேர்க்கும் கெமிக்கல் புற்றுநோய் ஆஸ்துமா போன்றவற்றை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டுள்ளது.
இதய நோய்கள்
நூடுல்ஸில் அதிகப்படியான உப்பு கலந்து இருப்பதால் அதனை சாப்பிடும் குழந்தைகள் எதிர்காலத்தில் இதயம் சார்ந்த நோய்களை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.