ரத்தத்தில் வேகமாக சர்க்கரையை கலக்கும் கான்ஸ்டார்ச் சிரப் அடங்கிய சாக்லேட் சாப்பிடுவதால் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்து பற்றிய தொகுப்பு
குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடும் பொருட்களில் ஒன்று சாக்லேட். குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் சாக்லேட்டை விரும்பி சாப்பிடுவது உண்டு. முன்பெல்லாம் கடலை மிட்டாய் வாங்கி சாப்பிடுவது வழக்கமாக இருந்தது. இப்போது எங்கு பார்த்தாலும் சாக்லேட்டு தான் அதிகமாக விற்கப்படுகிறது. ஆனால் கடலை மிட்டாயில் இருந்த சத்துக்கள் தற்போது விற்கப்படும் சாக்லேட்களில் இருப்பதில்லை. குறிப்பாக சாக்லேட் சாப்பிடுவதனால் பெண் குழந்தைகளுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மூன்று பிரச்சினைகள் ஏற்படுகிறது.
அதிகமாக சாக்லேட் சாப்பிடும் பெண் குழந்தைகள் விரைவாக பூப்பெய்தி விடுகிறார்கள்.
அதிகமாக சாக்லேட் சாப்பிடும் பெண் குழந்தைக்கு சினைப்பை நீர்க்கட்டி என்று கூறப்படும் பாலிசிஸ்டிக் ஓவரி வருகிறது.
பெண்குழந்தைகள் கான்ஸ்டார்ச் சிரப் அடங்கிய சாக்லெட் அதிகமாக சாப்பிடுவதால் மார்பகப் புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது