Categories
மாநில செய்திகள்

அலர்ட் மக்களே அலர்ட்… டிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி… பண மோசடி…!!!

சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி டிஎன்பிஎஸ்சி என்ற பெயரில் பண மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால் இதனை சில கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு சென்னையில் டிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி ஒதுக்கீடு ஆணை வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலி ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய தொடர்பாக வழக்குப்பதிவு செய்து புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த நாகேந்திர ராவ் மற்றும் அவரது நண்பர் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்களிடம் மக்கள் பணத்தைக் கொடுத்து ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |