தமிழ்நாடு மின்வாரியத்தின் கேங் மேன் பணிகளுக்க்காக கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு பணி நியமனம் வழங்கட கோரி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை முன்பு தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் கம்பங்களில் ஏறுதல், மின் பொருட்களை எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 2019ஆம் ஆண்டு கேங் மேன் என்ற பணியை உருவாக்கியது. இதற்காக நடைபெற்ற தேர்தலில் 15 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற ஓராண்டிற்கு மேல் ஆகியும் பணி நியமன ஆணை வழங்கப்படாததால் 500க்கும் மேற்பட்டவர்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருதுநகர் மாளிகை முன்பு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வரும் நிலையில் தமிழக அரசிடம் வேலை கேட்டு தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது ஆளும் அரசுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.