Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூரில் அதிரடி வேட்டை ..! சோதனையில் இறங்கிய போலிஸ்… வசமாக சிக்கிய 11பேர்…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றதிற்காக போலீசார் 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம், வெங்கமேடு, வாங்கல், தாந்தோனிமலை ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பல்வேறு இடங்கள் மற்றும் கடைகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அச்சோதனையின்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 11 பேர் மீது வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகில் உள்ள பெட்டிக் கடையில் வைத்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததற்காக ஓ.கே.ஆர் தோட்டத்தைச் சேர்ந்த மணி என்பவரையும், புகழூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள பெட்டிக் கடையில் புகையிலை விற்ற  குற்றத்திற்காக செக்குமேடு பகுதியில் வசித்து வந்த ராஜு என்பவரையும் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |