Categories
உலக செய்திகள்

ஜோ பைடனுக்கு ஆதரவாக…. ட்ரம்ப்க்கு எச்சரிக்கை விடுத்துள்ள… 10 முன்னாள் அமைச்சர்கள்…!!

அமெரிக்காவின் 10 முன்னாள் அமைச்சர்கள் இணைந்து ட்ரம்ப்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

அமெரிக்காவின் 10 முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் ஜனாதிபதி டிரம்பை எச்சரித்துள்ளனர். அதாவது அமெரிக்காவின் தேர்தல் முடிவுகளின் சர்ச்சையில் ராணுவத்தை குறிப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளனர். தேர்தல் முடிவுகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்துள்ள நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டிற்கு ஆபத்து மற்றும் சட்ட விரோதமாகவும் அரசியலமைப்பற்ற எல்லைக்குள் கொண்டு செல்வது போன்ற செயல் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அந்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் அமைதியான முறையில் அதிகாரப் பகிர்வு நடக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஜனாதிபதியான டிரம்ப் மக்களின் கோரிக்கையை கண்டிப்பாக ஏற்க வேண்டும் என்றும்  ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் குறித்த சர்ச்சையை தீர்க்க வேண்டும் என்றும் ஜனநாயக கட்சியில் ஜோ பைடன் வெற்றியடைந்துள்ளது அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அழைத்துள்ளனர். மேலும் பல மாகாணங்களில் ஜனாதிபதி ட்ரம்பின் குற்றச்சாட்டுகளை நீதிமன்றங்களே தள்ளுபடி செய்துள்ளது.

எனினும் மீண்டும் மீண்டும் சர்ச்சையை தொடர்ந்து கொண்டிருப்பது முறையாகாது என்றும் கூறியுள்ளனர். மேலும் அதிகார பகிர்வு, பிரச்சனையின்றி நடந்தேற வேண்டும். அதற்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் ஜோ பைடன் க்கு ஆதரவளிக்கும் அந்த 10 முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களில் இருவர் ஜனாதிபதி டிரம்ப் உடன் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த 10 முன்னாள் அமைச்சர்களும் தற்போது குடியரசு ஜனநாயகக் கட்சிகளில் ஒன்றிணைந்து பணியாற்றி வருபவர்கள் ஆகும்.

Categories

Tech |