கோபிச்செட்டிப்பாளையம் பகுதியை சுற்றியுள்ள 50 கிராமங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் .
கோயம்புத்தூர் மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ஆங்காங்கே சூறைக் காற்றில் சிக்கிய மரங்கள் சரிந்து விழுந்து உள்ளன. வீடுகளின் மீதும் மின்கம்பங்களில் மிகவும் மரங்கள் சரிந்து விழுந்ததால் மின்சார தடை என்பது சுற்றியுள்ள 50 கிராமங்களுக்கு ஏற்பட்டுள்ளது .
மின்சார தடையால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை தொடர்ந்து விரைவில் மின் தடை பிரச்சனையை சரி செய்யும் விதமாக மரங்களை அகற்றும் பணியில் மின்சாரத் துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.