கொச்சி – மங்களூரு இடையிலான 450 கிலோ மீட்டர் தொலைவு குழாய் வழி எரிவாயு வினியோக அமைப்பை, காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோதி இன்று தொடங்கி வைக்கிறார்.
கொச்சி – மங்களூரு இடையிலான 450 கிலோ மீட்டர் தொலைவு குழாய் வழி எரிவாயு வினியோக அமைப்பு திட்டம் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளது. கெயில் இந்தியா நிறுவனம் இந்த கியாஸ் குழாய் இணைப்பை உருவாக்கியிருக்கிறது. இதன்மூலம், கொச்சியில் உள்ள, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை மீண்டும் வாயுவாக்கும் முனையத்தில் இருந்து மங்களூருவுக்கு கியாஸ் அனுப்பப்படும்.
குழாய் வழியாக தினமும் 1.2 கோடி மெட்ரிக் கனமீட்டர் கியாசை அனுப்ப முடியும். எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களை இந்த குழாய் அமைப்பு கடந்து செல்கிறது. கொச்சியில் இருந்து மங்களூருக்கு குழாய்வழியாக செல்லும் எரிவாயு வினியோக அமைப்பை, காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோதி இன்று தொடங்கி வைக்கிறார்.