இந்திய வீரர் கே.எல் ராகுல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய வீரர் கே.எல் ராகுல் விலகினார். இந்தியா – ஆஸ்திரேலியா இடையே இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் உள்ள நிலையில் ராகுல் விலகியுள்ளார். ராகுலுக்கு பயிற்சியின் போது இடது கையில் காயம் ஏற்பட்டதால் அவர் இந்தியா திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உமேஷ் யாதவ் மற்றும் ஷமி ஆகியோர் காயம் ஏற்பட்டதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் ஜனவரி 7- ஆம் தேதி நடைபெறவுள்ளது.